Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'இந்தியன் 2' மாற்றத்திற்கு மணிரத்னம் காரணமா?

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 19ஆம் தேதியில் இருந்து ஐதராபாத்தில் தொடங்க உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்பந்தமாகியிருந்த ரவிவர்மன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேல் அவர்களை ஷங்கர் ஒப்பந்தம் செய்தார். இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியன்-2 படத்திலிருந்து ரவிவர்மன் விலகியதற்கான காரணம் இதுவரை இருதரப்பிலும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் கோலிவுட்டில் ஒரு தகவல் கசிந்து வருகிறது. அதாவது மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் பணிபுரிய அழைப்பு வந்ததால் ரவிவர்மன் 'இந்தியன் 2' படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை ரவிவர்மன் மற்றும் மணிரத்னம் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களில் பணி புரிவது சாத்தியமில்லை என்பதால் ரவிவர்மன் இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

ஈரம் பட கூட்டணியின் அடுத்த படம் ‘சப்தம்’.. ரிலீஸ் தேதி இதுதான்!

நடிகர் சிவராஜ்குமாருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது…!

விடாமுயற்சி படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்த அஜித்!

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments