Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக ஜோதிகா படத்திற்கு அதிகாலை காட்சி!

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (20:55 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது
 
மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த அதிகாலை காட்சி வசதியாக இருப்பதால் பல நடிகர்களின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருகிறது. இந்த காட்சிக்கு வழக்கமான காட்சிகளை விட அதிக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர்களின் படங்கள் மட்டுமே அதிகாலை காட்சியை திரையிடப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு சில நடிகைகளின் திரைப்படங்களும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகின்றன. குறிப்பாக சமந்தா, நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகளின் படங்களும் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது 
 
இந்த நிலையில் முதல் முறையாக ஜோதிகா நடித்த திரைப்படமும் அதிகாலை காட்சி திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை GK சினிமாவில் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் வரும் வெள்ளியன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் அதிகாலை காட்சியில் திரையிடப்படுவதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கல்யாண் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபாஸுக்கு வில்லன் ஆகிறாரா விஜய் சேதுபதி?.. எந்த படத்தில் தெரியுமா?

நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது ஆண் குழந்தை.. பெயர் என்ன தெரியுமா?

சலார் 2 என்ன ஆச்சு?... நடிகர் பிரித்விராஜ் கொடுத்த அப்டேட்!

மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கில் நயன்தாராவுடன் சுந்தர் சி மோதலா?.. நின்ற படப்பிடிப்பு!

கார்த்தி 29 படத்தின் கதாநாயகி இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments