சிம்பு நடிக்கும் மாநாடு படம் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக தீபாவளிக்கு ரிலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இவ்விரு படங்களுக்குமே திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது புதிதாக மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தனியாக அதிக திரைகளில் ரிலீஸானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் இப்போது ரஜினி மற்றும் அஜித் படங்களோடு மோதும் ரிஸ்க்கை எடுப்பது ஏன் என்று சிம்பு ரசிகர்களே குழம்பியுள்ளனர். அதற்கு பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதால் அதற்குள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் சிம்புவின் மாநாடு தீரைப்படம் தீபாவளிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.