Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'இந்தியன் 2' படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு! ஏன் தெரியுமா?

Advertiesment
'இந்தியன் 2' படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு! ஏன் தெரியுமா?
, ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (16:34 IST)
கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இதற்கு காரணமாக இந்த படத்திற்கு பிரமாண்டமாக செட் அமைத்து வரும் டி.முத்துராஜின் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், செட் அமைக்கும் பணி முடிய இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என்பதால் படப்பிடிப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக ஷங்கர் தான் இயக்கும் படங்களை திட்டமிட்டபடி முடித்ததில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனால் தற்போது தொடக்கமே திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்பது ஒரு புதிய சாதனைதான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

webdunia
இந்த படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால்தான் இன்று கமல்ஹாசன், மதுரையில் நடைபெறும் கட்சி பணிக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரியில் அதிரடியாக வரும் "தாதா 87"