Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம் ?

தள்ளிப்போனது இந்தியன் 2 படப்பிடிப்பு – அதிர்ச்சியளிக்கும் காரணம் ?
, சனி, 15 டிசம்பர் 2018 (12:28 IST)
ஷங்கர் நடிப்பில் கமல்ஹாசனின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தியன் 2 –வின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கமல் நடிப்பில் அவரது திரை வாழ்வின் கடைசிப் படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்குவதாக இருந்தது. இதற்காக கமலின் இந்தியன் தாத்தாவுக்கான மேக்கப் டெஸ்ட்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டன. அதற்காக வெளிநாடுகளில் இருந்து மேக்கப் கலைஞர்கள் இந்தியா வந்து தங்கியுள்ளனர்

அதைத் தொடர்ந்து கலை இயக்குனர் முத்துராஜ் தலைமையில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்ததும் இந்தமாதம் 14 ( நேற்று ) ஆம் தேதி முதல் இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. அதையடுத்து சில தினங்களில் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டப்படி அரங்கு அமைக்கும் பணி முடிவடையாததாலும் மார்கழி மாதம் தொடங்க இருப்பதாலும் படப்பிடிப்பினை மார்கழி முடிந்து தை மாதம் அதாவது ஜனவரி 14 க்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என அறிவித்து விட்டதாம். கமலும் கஜா புயல் பகுதிகளில் பார்வையிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை மட்டும் செஞ்சுடாதீங்க ப்ளீஸ்! இளசுகளை கெஞ்சும் யாஷிகா ஆனந்த்