Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைநாள் தான் போராட்டமா? நடிகர் சங்கத்தின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கண்டனம்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (10:33 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி அந்த பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வலியுறுத்தியும் நடிகர் சங்கம் வரும் 8ஆம் தேதி அறப்போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த போராட்டம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சைக்கு ஒரு முழு நாள் போராடாமல் அரை நாள் மட்டும் போராடுவது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சங்கம், 'நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments