Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்ணாவிரத மேடையில் இருக்கை இல்லை - கரூரில் சலசலப்பு (வீடியோ)

Advertiesment
உண்ணாவிரத மேடையில் இருக்கை இல்லை - கரூரில் சலசலப்பு (வீடியோ)
, செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (17:14 IST)
கரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இருக்கைகள் இல்லாததினாலும், போராட்டக்களத்தில் அமைச்சருடன் மக்கள் செல்பி எடுத்ததாலும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

 
கரூர் பேருந்து நிலையம் அருகே, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
காவிரி மேலாண்மை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத மத்திய அரசை வலியுறுத்தி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது. 
 
கூட்டம் கூடுவதற்கு ஏதுவாக இல்லாதது போல், கூட்டத்திற்கு ஏற்ப, சாமியானா பந்தலும், சேர்களும் போடப்பட்டது. மேலும் ஒரு சிலருக்கு அதாவது விவசாயிகளுக்கு இருக்கைகள் இல்லாததினால், ஆங்காங்கே உள்ள கடையடைப்பில் ஈடுபட்ட கடைகளின் முன்பு தரையில் அமர்ந்தும் தங்களது உண்ணாவிரத போராட்டத்தின் எதிர்ப்பை காண்பித்தனர். 
 
மேலும், ஒரு சிலருக்கு, வாகன வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், திறந்த வெளி ஆட்டோவில் ஏற்றி கொண்டு வரப்பட்டனர். மேலும், அங்கே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகவும், காவிரி உரிமைக்காகவும், நிலை நாட்ட, வந்த மக்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம், போராட்டக்காரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சி. ஆனந்தகுமார் - கரூ செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஎஸ்டிக்குள் வருமா பெட்ரோல்? விலை உயர்வுக்கு தீர்வு என்ன?