Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி பிறந்தாள் வந்தாலே வெளியூருக்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார் - ஏன் தெரியுமா?

ரஜினி பிறந்தாள் வந்தாலே வெளியூருக்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார் - ஏன் தெரியுமா?
, வியாழன், 12 டிசம்பர் 2019 (12:42 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமா ஜாம்பவான்களின் முக்கிய நபராக பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்  தன் வாழ்நாளில் 69 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று தனது 70 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு நண்பர்கள் , பிரபலங்கள் , ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
 
ரஜினி தனது பிறந்த நாள் வந்தாலே சென்னையில் இருப்பதில்லை. மேலும் தனது ரசிகர்களை பிறந்தநாளில் சந்திப்பதை கூட பல வருடங்களாக தவிர்த்து வருகிறார். அவர் அப்படி செய்ய காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்ததில், கடந்த  23 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அவரது ரசிகர்கள் மூன்று பேர் ஊர் திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிர் இழந்தனர். 
 
இந்த சம்பவம் ரஜினியை வெகுவாக பாதித்தது. அன்றிலிருந்து ரசிகர்களின் நலன் கருதி முடிவெடுத்த ரஜினி,  இனி தனது பிறந்தநாள் வந்தாலே சென்னையில் இருப்பதை தவிர்த்து வேறு எதாவது நாட்டிற்கு சென்றுவிடவேண்டும் என எண்ணினாராம். அது தான் இதுநாள் வரை நடந்து கொண்டிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதுல்யாவுடன் ஓவர் ரொமான்ஸ் செய்யும் கேப்மாரி ஜெய் - ப்ரோமோ வீடியோ!