Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் அறிக்கைக்கு அவருடைய நெருங்கிய நண்பர் காரணமா? பரபரப்பு தகவல்

அஜித்தின் அறிக்கைக்கு அவருடைய நெருங்கிய நண்பர் காரணமா? பரபரப்பு தகவல்
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (08:26 IST)
நேற்று அஜீத் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு அந்த அறிக்கையில் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோர்களுக்கு எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்ததூ. தனது தகவல்கள் அனைத்தும் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவரால் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தன்னை பற்றிய தகவல் தெரிய விரும்புவோர் அவரிடம் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அவர் இல்லாமல் மற்றவர்கள் வெளியிடும் தகவல்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றும் அஜீத் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார் 
 
இந்த அறிக்கையின் பின்னணி என்ன என்பது குறித்து கோலிவுட்டில் விசாரித்தபோது அஜித்தின் பழைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் அவரது படத்தை தயாரித்த பழைய தயாரிப்பாளர்கள் அவரது பெயரைச் சொல்லியும் ஆதாயம் அடைந்து வருவதாகவும் இது அஜித்தின் கவனத்திற்கு வந்ததால் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது 
 
அஜித்திடம் வேலை பார்த்த மேனேஜர்கள் மிகக்குறைந்த நபர்கள்தான் என்றும் அதே போல் அஜித்துக்கு நெருக்கமான நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே உள்ளனர் என்றும் ஆனாலும் அவர்கள் அரசு அலுவலகங்கள் உள்பட ஒருசில இடங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தியதாக வந்த தகவலை அடுத்து அஜீத் தனது வழக்கறிஞர் மூலம் இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா !