Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழட்டிவிட்ட சுந்தர் சி… ஹிப் ஹாப் ஆதிக்கு கைஜொடுத்த அஜித் பட தயாரிப்பாளர் !

கழட்டிவிட்ட சுந்தர் சி… ஹிப் ஹாப் ஆதிக்கு கைஜொடுத்த அஜித் பட தயாரிப்பாளர் !
, வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:06 IST)
ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சுந்தர் சி எப்போதும் ஒரு இசையமைப்பாளர் செட் ஆகிவிட்டால் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார். சிற்பி, யுவன் ஷங்கர் ராஜா, இமான் என அந்த வரிசையில் கடைசியாக ஹிப் ஹாப் ஆதியோடு பல படங்களில் பணிபுரிந்தார்.

அதோடு நிற்காமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களுக்கு ஹிப் ஹாப் ஆதியை விடுத்து வேறு சில இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் இயக்க உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!