Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (11:03 IST)
தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.


 
தெறி, மெர்சல் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய அட்லியுடன் தளபதி விஜய் 3வது முறையாக இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி  63 என்று தற்காலிகமாக  படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
 
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து படத்தின் கதை உருவாக்கபட்டுள்ளது. கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. தீபாவளி வெளியிடாக திரைக்கு கொண்டுவர ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
இந்நிலையில் விஜய் அடுத்தாக யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் யூகங்கள் பல எழுந்துள்ளன. விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் ஆர்வத்தில் ஷங்கர், முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் கதையுடன் காத்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. இதறகிடையில் தனிஒருவன், வேலைக்காரன் படங்களை இயக்கிய மோகன்ராஜாவுன் விஜய்யை வைத்து படம் எடுக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரை யாரையும் அழைத்து விஜய் கதைகேட்டதாக தகவல் இல்லை. எனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது அவரது மௌனப்புன்னகையைப் போல் புதிராகவே உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments