மீண்டும் 'சேதுபதி 2' : கம்பீரமாக வேட்டையாட வர்றாரு விஜய் சேதுபதி

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (10:59 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் 'சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார்.


 
கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்தப் படம்  சூப்பர் ஹிட்டாக ஓடியது. சேதுபதி படம், விஜய் சேதுபதியை  கமர்சிஷயல் ஹிட் நாயகனாக மாற்றியது. இந்நிலையில்  தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி 'மாமனிதன்' படத்தில் நடித்த முடித்துவிட்டார். இதேபோல் அரவாணி வேடத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும்  நடித்து முடித்துவிட்டார். சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சிந்துபாத்  படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.  அவர் தற்போது கடைசி மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி விஜய் சேதுபதி அல்லது இயக்குனர் அருண்குமார் பதில் அளித்தால் உண்மையா என்பது தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

பிக் பாஸ் தமிழ்: கனி - பார்வதி மோதல்! கிச்சன் அணியில் இருந்து கனி வெளியேற முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments