Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த படம் பார்த்ததற்கு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.- கார்த்திக் சிதம்பரம்

Advertiesment
அந்த படம் பார்த்ததற்கு  சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.- கார்த்திக் சிதம்பரம்
, சனி, 9 செப்டம்பர் 2023 (12:50 IST)
''அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.’’ என்று சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் பல அதிரடி கருத்துகளை கூறிவருகிறார்.

சமீபத்தில் அவர் கூறிய கருத்துகள்  விவாதத்தை கிளப்பிய நிலையில், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில்,  ‘’நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் என்ன படம் பார்த்தார் என்று வெளிப்படையாக கூறவில்லை. இந்த நிலையில் அவரது பதிவிற்கு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான விக்ரம் பட வெற்றிக்கு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் பரிசளித்திருந்தார். அதேபோல், அண்மையில் வெளியான ஜெயிலர் பட வெற்றிக் கொண்டாட்டமாக சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன், அப்படத்தின் ஹீரோ ரஜினி, இயக்குனர்   நெல்சன், இசையமைப்பாளர் அனிருத்திற்கு சொகுசு கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா- பாரத் விவகாரம்:படத்தின் டைட்டிலை மாற்றிய ரஜினி பட நடிகர்