Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னுடைய மனைவி யார் என்பதை முதல்முறையாக வாய் திறந்த பிரபாஸ்!

Advertiesment
தன்னுடைய மனைவி யார் என்பதை முதல்முறையாக வாய் திறந்த பிரபாஸ்!
, வியாழன், 14 டிசம்பர் 2017 (13:41 IST)
பாகுபலி திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். தற்போது பிரபாஸூக்கு வயது 38. இவரது திருமணத்துக்காக இவரது மொத்தக் குடும்பமும் சில ஆண்டுகளாகவே மணப்பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.
பாகுபலி 2 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தாலும், அதை தாண்டி பிரபாஸ் அனுஷ்கா காதல் விவகாரமும் பிரம்மாண்டமாய் பேசப்பட்டது. தற்போதும் அவை பேசப்படுகிறது. சமீபத்தில் திருமணம் பற்றி நடிகை மஞ்சு லட்சுமி நேர்காணலில் பதில் அளித்த பிரபாஸ், தனது திருமணம் குறித்து அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே  தெரியாத காரணத்தால் உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் தனக்கு வரப்போகும் மனைவி செயற்கைத் தனங்கள் அற்ற நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இருப்பதாக பிரபாஸ் தெரிவித்துள்ளார். அழகை பற்றி பெரிதாக  அலட்டிகொள்ளப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
 
அப்படி ஒரு பெண் கிடைத்து விட்டால் அவர் தான் மிஸஸ் பாகுபலி என டிவியில் பிரேக்கிங் நியூஸ் வரும் என பிரபாஸ்  நகைச்சுவையாக பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?