என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

Prasanth K
திங்கள், 3 நவம்பர் 2025 (16:10 IST)

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்த முதல் நாளே மொத்த பிக்பாஸ் வீடும் அவர்களுக்கு எதிராக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுவரை பிக்பாஸ் சீசனில் பிக்பாஸ் வீடு, லக்ஸரி வீடு இடையே முட்டல் மோதல் நிலவி வந்தது. ஆனால் கனியின் அன்பு கேங்கில் பாதி பேர் லக்ஸரியிலும், பாதி பேர் பிக்பாஸ் வீட்டிலும் மாறிய பிறகு ஆட்டமே சுவாரஸ்யம் குறைந்து போய்விட்டது. வாட்டர்மெலன் திவாகர், விஜே பாரு உள்ளிட்டவர்களும் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியிலாவது ஆட்டத்தில் சுவாரஸ்யம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்ட்ரா, திவ்யா கனேஷ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் சென்றுள்ளனர். ஆனால் போன முதல் நாளே அக்ரஸிவான கேமை அவர்கள் விளையாடியதால் மொத்த பிக்பாஸ் வீடும் அவர்களுக்கு எதிராக திரும்பத் தொடங்கியுள்ளது.

 

காலை வெளியான ப்ரோமோவில் விஜே பாரு வைல்ட் கார்டு போட்டியாளர்களை வறுத்தெடுத்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில், என்னை வெளியே போக சொல்ல நீங்க யார் என திவ்யா கணேஷிடம் எகிறியுள்ளார் வாட்டர்மெலன் திவாகர். பிக்பாஸில் ஏற்கனவே உள்ள சண்டை கண்டெண்டர்களை தாண்டி புதியவர்கள் எண்டெர்ட்யினிங்கான கண்டெண்டை கொடுப்பார்களா? அல்லது ட்ரிகர் ஆகி இவர்களும் சண்டையில் இறங்கி விடுவார்களா? என்பது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா & ஆர் ஜே பாலாஜியின் கருப்பு ரிலீஸில் தொடரும் சிக்கல்…!

அடுத்த கட்டுரையில்
Show comments