Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களின் எதிர்மறை விமர்சனம்… விசில் போடு பாட்டை மாற்றிய வெங்கட்பிரபு!

vinoth
திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:02 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

இதுவரை படத்தில் இருந்து வெளியான பாடல்கள் எதுவும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை. அதிலும் முதல் பாடலான விசில் போடு பாடல் ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் தியேட்டரில் வெளியாகும் போது சில மாற்றங்களோடு இடம்பெற்றிருக்கும் என இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். அந்த பாடல் ஒரு திருவிழா பாடல் போல இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments