Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித் ரசிகையின் வசனத்தை பேசினாரா விஜய்?

Advertiesment
அஜித்
, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:22 IST)

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி உள்ள  சர்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக  நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய், ஏ ஆர் முருகதாஸ் , ஏ ஆர் ரகுமான் ரகுமான், கலாநிதி மாறன்   உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், “இது யாரு சொன்ன வரிகள் எனக்கு தெரியல, ஆனால் இதை நான் ஃபாலோ பண்ணுறேன். உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்கும்” என்று கூறினார்.  

தன்னை வெறுப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக விஜய் கூறிய வரிகள் சமூக வலைதளங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வரிகளை கடந்த 2017-ம் ஆண்டு அஜித் ரசிகை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் எழுதியிருக்கும் அந்த வரிகளை குறிப்பிட்டு விஜய் பேசும் வீடியோவையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார்.

அஜித் ரசிகை எழுதிய இந்த வரிகளை விஜய் பேசியிருப்பது தனக்கு கர்வமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள கயல்விழி, ”நாங்க என்ன பேசனும்னு நாங்க தான் முடிவு பண்ணனும் நீங்க என்ன பேசனும்னும்னும் நாங்க தான் முடிவு பண்ணனும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜானு மீது காதல் மழை பொழியும் ரசிகர்கள்! த்ரிஷா உருக்கமான நன்றி