Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவதார் 2 பட ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!

அவதார் 2 பட ப்ரோமோ வீடியோ ரிலீஸ்!
, புதன், 8 ஜனவரி 2020 (17:41 IST)
உலகளவில் வசூல் சாதனைப் புரிந்த அவதார் படத்தின் அடுத்த பாகத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலகம் முழுக்க உள்ள அவதார் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளனர். 
 
உலகையே தனது டைட்டானிக் படத்தின் மூலம் கலக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவதார்.  இந்தப் படம் உலகம் முழுப்வதும் 2.78 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதன் அடுத்த பாகம் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த ரசிகர்களுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 17 2021ம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 
 
இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது படத்தை குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்திய நிலையில் நேற்று அவதார் 2 புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.. அதையடுத்து தற்போது தற்போது பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படக்குழு ஒரு கான்சப்ட் காரை வெளியிடவுள்ளனர்.
இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை கவனத்தை ஈர்த்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வானம் கொட்டட்டும் - டீசர் ரிலீஸ்! பட ரிலீஸ் எப்போ?