28 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி- சுந்தர் சி கூட்டணி… என்ன எதிர்பார்க்கலாம்?

vinoth
வியாழன், 6 நவம்பர் 2025 (08:06 IST)
சமீபகாலமாக ரஜினி வெறும் ஆக்‌ஷன் படங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலானப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பது அவர் இல்லை டூப்தான் என்று தெரிந்தாலும் ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக விசிலடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இரத்தமாகப் பார்த்து பூத்துப் போனக் கண்களுக்கு சிறு ஆறுதலாக ரஜினி அடுத்து சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றவுள்ள படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சுந்தர் சி தற்போதைய இயக்குனர் போல திரையில் இரத்த ஆற்றை ஓடவைக்கமாட்டார்.

இருவரும் 28 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து பணியாற்றிய அருணாச்சாலம் ஆக்‌ஷன் படம்தான் என்றாலும் அது ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் படம் போலதான் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில் ரஜினிக்கு நான்கு வில்லன்கள் இருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகள் அளவாக ரசிக்கும்படிதான் இருக்கும். அதனால் அப்படி ஒரு படத்தைதான் இப்போதுதான் அவர்கள் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடிக்கும் புதிய படம்!.. கமல் கொடுத்த அப்டேட்!.. வைரல் போட்டோ!...

அரசன்’ படம் எப்படி வரப்போகுது தெரியுமா? புது அப்டேட் கொடுத்த கவின்

திரை தீப்பிடிக்கப் போகுது… ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் ஆக்‌ஷன் விருந்து!

விஜய் சேதுபதி படம் தாமதம்… ஹரிஷ் கல்யாணை இயக்கும் பாண்டிராஜ்!

150 கோடி ரூபாய் மைல்கல் வசூலைத் தொட்ட ராஷ்மிகாவின் ‘தாமா’!

அடுத்த கட்டுரையில்
Show comments