Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படிபட்ட வரிகள்! முழுசாவே டபுள் மீனிங்! - வைரலாகும் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்!

Advertiesment
Jollyoh Jimkana

Prasanth Karthick

, சனி, 26 அக்டோபர் 2024 (08:48 IST)

பிரபுதேவா நடித்து வெளியாகவுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.

 

 

தமிழ் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து தயாராகியுள்ள படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும் அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்..

 

முழுநீள காமெடி படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா’ என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலின் வரிகளை இயக்குனர் சக்தி சிதம்பரமே எழுதியுள்ளார். அந்த பாடலில் ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா லத்தி வெச்சு அடிப்பான்.. பஸ் டிரைவரை கட்டிக்கிட்டா தினமும் ஹார்ன் அடிப்பான்.. மெக்கானிக் மாப்பிள்ள தினம் கழட்டு மாட்டுவான்” என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

 

மறைமுகமாக டபுள் மீனிங்கில் உள்ளது போல இந்த பாடலை எழுதியுள்ளதாக தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. சிலர் ‘பாட்டுல டபுள் மீனிங் இல்ல.. டபுள் மீனிங்லதான் பாட்டே இருக்கு’ என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் கனகராஜின் 10 நிமிட LCU குறும்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. !