Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (17:09 IST)

நடிகர் விஷால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் உடல்நிலை குன்றிய நிலையில் காணப்பட்ட நிலையில் அதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

 

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளவர் விஷால். சமீபமாக விஷால் நடித்து வந்த படங்களில் ‘மார்க் ஆண்டனி’ தவிர மற்ற படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்று வந்தது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்த ‘மதகஜராஜா’ படம் கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு எழுந்துள்ள நிலையில் நேற்று இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு வந்த விஷால் கண்ணாடி அணிந்து, கை நடுநடுங்க பேசியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுமுதலாக விஷாலுக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இப்படி இருக்கிறார்? என சமூக வலைதளங்கள் முழுவதும் பேச்சாக இருந்தது.

 

இந்நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனை நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஷால் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே அவர் நிகழ்ச்சியில் சோர்வாக காணபட்டதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments