Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (14:58 IST)

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

 

 

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கேம் சேஞ்சர். தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் இந்த பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

ஆனால் முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலிக்காததோடு, மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியன் - 3 படத்தை ஷங்கர் சம்பளம் இல்லாமல் முடித்து தர வேண்டும் என லைகா கேட்ட நிலையில், ஷங்கர் தனக்கு ரூ.65 கோடி சம்பளம் தந்தால்தான் படத்தை இயக்க முடியும் என சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதனால் ஷங்கர் தனது இந்தியன் 3 படத்தை முடித்து கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் திரைத்துறை கூட்டமைப்பில் புகார் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படாததால் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்க ஒப்பந்தமும் தமிழ்நாட்டில் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இதனால் இந்த படம் தமிழ்நாட்டில் குறித்த நாளில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments