இந்த பொங்கலுக்கு விஷாலின் மதகஜராஜா படம் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஷால் அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி என பலர் நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம் மதகஜராஜா. இந்த படம் கடந்த 2012ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் போனது. சில வருடங்களுக்கு முன்னால் விஷால் இந்த படத்தை வெளியிட கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் சுமார் 12 வருடங்கள் கழித்து இந்த பொங்கலுக்கு தனது ரிலீஸை அறிவித்துள்ளது மதகஜராஜா. பொங்கலுக்கு 11 புதிய படங்கள் வெளியாகும் நிலையில் மதகஜராஜாவுக்கு இப்போதே சமூக வலைதளங்களில் ஆதரவு பதிவுகள் குவியத் தொடங்கிவிட்டன. அந்த சமயத்தில் சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு உள்ளிட்ட எல்லா படங்களும் நகைச்சுவை சிறப்பாக வொர்க் அவுட் ஆனவை என்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஷால் “12 ஆண்டுகள் நீண்ட இடைவேளைக்கு பிறகு எனது திரைப்பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த குடும்ப எண்டெர்டெயின்மெண்ட் படமான மதகஜராஜா பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதுவும் எனக்கு பிடித்த சுந்தர்.சி. சந்தானம் கூட்டணியில் உருவான படம். நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமிருக்காது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K