அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

Bala
செவ்வாய், 18 நவம்பர் 2025 (18:06 IST)
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கனி வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் ஆறு வாரங்களே இருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பல youtube சேனல்கள் அவரை பேட்டி எடுத்து வருகின்றனர். வெளியே வந்தாலும் இன்னும் அவருடைய அந்த பழைய பேச்சு தான் தொடர்ந்து கொண்டே வருகின்றது.
 
பிக் பாஸ் வீட்டிற்குள் அவருக்கும் கானா வினோத்துக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி பலராலும் ரசிக்கப்பட்டது. காமெடியாக இருந்தாலும் அனைவரும் அதை ரசித்தனர். விஜய் சேதுபதியே ஒரு சமயம் உங்களுடைய காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருடைய உண்மையான முகம் பற்றி உங்களுக்கு தெரியாது என வெளியே வந்த திவாகர் பேட்டியில் கூறி வருகிறார்.
 
ஆரம்பத்தில் எங்களுடைய பேச்சு இயற்கையாகவே இருந்தது. அதன் பிறகு அவருடைய படுக்கை அருகில் நான் படுத்த போது தான் அவருடைய உண்மையான முகம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதுவும் விஜய் சேதுபதி எங்களுடைய காம்போவை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று எப்பொழுது கூறினாரோ அதிலிருந்தே என்னை உருவ கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார் கானா வினோத் என்று திவாகர் கூறியிருக்கிறார்.
 
அது மட்டுமல்ல கேட்க கூடாத வார்த்தைகளை பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசுவார். அந்த வார்த்தைகளை நான் சொல்லலாமா என்று நிரூபரிடம் கேட்டதற்கு நிருபர் வேண்டாம் என சொல்லிவிட்டார். அதனால் இங்கு அந்த வார்த்தைகளை எல்லாம் சொல்ல முடியாத காரணத்தினால் நான் சொல்ல முடியாது என்றும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் திவாகர்.
 
 என்னை வைத்து தான் அவர் பிரபலமானார். அவர் வரும்பொழுது கானா வினோத்தை யாருக்குமே தெரியாது. ஆனால் என்னை எல்லோருக்கும் தெரியும். அவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தாலும் அவ்வப்போது ரசிகர்களிடம் தொடர்பிலேயே இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருந்தேன். அதனால் தான் உள்ளே வந்த அனைத்து போட்டியாளர்களும் என்னை நன்கு அறிந்து வைத்து இருந்தனர். ஆனால் கானா வினோத்தை யாருக்குமே தெரியாமல் இருந்தது. என்னால்தான் அவர் பிரபலமானார் என்று திவாகர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

‘வாரணாசி’ படவிழாவில் சர்ச்சை பேச்சு.. இயக்குனர் ராஜமெளலி மீது வழக்குப்பதிவு..!

எங்கள யாருனு நினைச்சீங்க? மைதானத்தில் ஆட்டம் காண வைத்த அஜித் மகன் மற்றும் SK மகள்

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments