சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு திரையரங்க ஹிட்டாக எந்த படமும் அமையவில்லை.
அவரின் சமீபத்தைய ஹிட்டான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் கூட ஓடிடிகளில் ரிலிஸாகிதான் வெற்றி பெற்றன. இதனால் சூர்யா தியேட்டர் ரிலீஸில் ஒரு பெரிய ஹிட் கொடுக்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அதை நிகழ்த்தும் விதமாக கருப்பு திரைப்படம் மாஸ் மசாலா சினிமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் டீசர் காட்சியில் கஜினி படத்தில் சூர்யா நடித்த பிரபல காட்சியான தர்பூசணிக் காட்சியை ரிக்ரியேட் செய்துள்ளனர். ஆனால் இந்தக் காட்சியை இப்போது மறு உருவாக்கம் செய்வதற்கேக் காரணம் சமூகவலைதளப் பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்தான் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் இந்த காட்சியை தன்னுடைய ரீல்ஸ்களில் செய்ததன் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது.