Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவுக்கு தரமான சம்பவம் ரெடியா! ‘கருப்பு’ டீசர் பார்த்த ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

Advertiesment
Karuppu Teaser

Prasanth K

, புதன், 23 ஜூலை 2025 (10:45 IST)

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஆனால் அவருக்கு சமீப வருடங்களில் தியேட்டர் ஹிட் என்று சொல்லும்படியாக படங்கள் அமையவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. சூரரை போற்று, ஜெய்பீம் படங்கள் ஹிட் அடித்தாலும் அவை தியேட்டருக்கு வரவில்லை. தியேட்டரில் வந்த எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ படங்களும் ஓரளவு ஹிட்தான் என்றாலும் பெரிய வசூலைத் தரவில்லை என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தற்போது சூர்யா - ஆர்ஜே பாலாஜி கூட்டணியில் வரும் கருப்பு படம் பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் சூர்யாவின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அன்பறிவ் - விக்ரம் மோர் ஸ்டண்ட் காட்சிகள் பட்டையைக் கிளப்புகின்றன,

 

சூர்யா ரசிகர்களுக்காகவே ஸ்பெஷலாக ஜெய்பீம் வக்கீல் கெட்டப், கஜினி சூர்யாவின் தர்பூசணி சீன் என பல மொமெண்டுகளை கதைக்குள் ஆர்ஜே பாலாஜி உருவாக்கியுள்ளார். இந்த படம் சூர்யாவின் வெற்றிக் கணக்கை தொடங்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் இணைந்த ராணா?... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!