ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி நாளை ரிலீஸாக உள்ளது. கலகலப்பான அரசியல் பேசும் இந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்த படம் அரசியல் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தற்போதுள்ள தமிழக அரசியல் கட்சிகளை கலாய்க்கும் விதத்தில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர்கள், டிரெய்லர் உள்ளிட்டவை பெரும் சர்ச்சையை கிளப்பியது . ஆர்.ஜே. பாலாஜியின் அப்பாவாக அரசியல் பிரமுகரும் அதிரடிப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் இப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகிறார்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசிற்காக காத்திருக்கும் நேரத்தில் ஆர்.ஜே. பாலாஜி பிரபல இணையத்தளத்தின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று கலகலப்பாக பேசினார். அதாவது, எல்.கே. படம் நாளை வெளியாகவுள்ளது அதற்காக நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லுங்க படத்தை தியேட்டர்ல பாருங்க , பார்த்திட்டு படம் பிடிக்கலனா செம்மயா திட்டுங்க தமிழ் ராக்கர்ஸ்ல கூட பாருங்க உங்கள் விருப்பம் தான். எங்கயாவது பாருங்க ஆனால் கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் என நகைச்சுவையோடு கூறினார்.