ரஜினி , அஜித் , விஜய் எல்லாம் எங்க போனாங்க ? தமிழக வீரர்களின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்த முதல் நடிகர்.!

செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (13:06 IST)
ஜம்மு காஷ்மீர் புல்வாமா  தீவிரவாத தாக்குதலில் வீர மரணத்தை தழுவிய 40 வீரர்களால்  இந்தியாவே அதிர்ந்து போனது. 


 
கடந்த பிப்ரவரி 14ம் தேதி வியாழனன்று  புல்வாமா மாவட்டத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு  துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில்  40 இந்திய துணை ராணுவ  பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். 
 
இதில் தமிழகத்தை சேர்ந்த  தூத்துக்குடி மற்றும் அரியலூர் மாவட்ட சிஆர்பிஎஃப் வீரர், சுப்பிரமணியன் மற்றும்  சிவசந்திரன் ஆகியோரும் உயிரிழந்தனர். இந்த இரண்டு வீரர்களுக்கும் நடிகர் ரோபோ ஷங்கர் தலா ஒரு லட்சம் நிதியுதவி செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு வீடியோ பதிவிட்டார். அவரின் அந்த பரந்த மனப்பான்மையை பலரும் பாராட்டினர். 


 
இந்நிலையில் தற்போது அந்த இரண்டு குடும்பத்தையும் நேரில் சந்தித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், சொன்னபடி இருவர் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் அளித்துள்ளார்.

அஜித் , விஜய் , ரஜினி , கமல் போன்ற பெரிய நடிகர்கள் கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காத நிலையில் காமெடி நடிகர் ரோபோ சங்கர் செய்துள்ள இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மகனுடன் முதன் முதலாக வெளியில் வந்த அஞ்சனா! லைக்ஸ் குவிக்கும் கியூட் புகைப்படம்!