Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா - சிறுத்தை சிவா படம் கைவிடப்பட்டதா ?

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (18:00 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா  இயக்கவுள்ள படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  சூர்யா. இவர்,  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை அடுத்து, கமல்- லோகேஷ் இணைந்து உருவாக்கிய விக்ரம் படத்தின் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினார்.

தற்போது, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படத்தில் அக்ஷய் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவதாகக் கூறப்பட்ட நிலையில்,  சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார்.  இதனால் சிறுத்தை சிவா- சூர்யா படம் கைவிடப்பட்டதாகக் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து முடித்ததும், வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இதை முடித்த பின், சிவா இயக்கத்தில் ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஆக்சன் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments