Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் உச்சத்தில் இருப்பதற்கு இவர் தான் காரணம் - கண்ணீர் விட்டு அழுத இயக்குனர்!

அஜித் உச்சத்தில் இருப்பதற்கு இவர் தான் காரணம் - கண்ணீர் விட்டு அழுத இயக்குனர்!
, வியாழன், 15 ஜூன் 2023 (18:22 IST)
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பரிந்துரையில், கடந்த 1990 ஆம் ஆண்டு என் வீட்டு என் கணவர் என்ற படத்தின் மூலம் பள்ளி மாணவனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார் அஜித்குமார். 
 
இதன்பின், 1993 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற படத்தில், அஜித்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், ஒரு சில விளம்பர படங்களிலும் அஜித்குமார் நடித்திருந்தார். அதன்பின்னர், 1993 ஆம் ஆண்டு, அமராவதி என்ற படத்தில் செல்வா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 
 
அதனையடுத்து தொடர்ந்து வெற்றி தோல்வி என மாறி மாறி மாறி நடித்து வந்தார். அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய உச்ச நடிகராவதற்கு முக்கிய படமாக அமைந்ததில் "முகவரி" படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குனர்  V.Z. துரை தற்போது சுந்தர் சியை வைத்து தலைநகரம் 2 படத்தினை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய அவர், நான் உதவி இயக்குனராக பணிபுரியாமலே என்னை பெரிதாக நம்பி முகவரி படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தவர் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி சார் தான். 
 
அவர் எனக்கு மட்டும் இல்லை அஜித்திற்கும் அவரால் தான் ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது. எப்பவும் எந்த கதை கிடைத்தாலும் இது அஜித்துக்கு செட் ஆகும் என அவரையே பற்றியே நினைத்து வாழ்ந்தார். அப்படி இருந்த மனுஷன் அண்மையில் தான் மறைந்தார். அவருக்காக நாம் அனைவரும் ஒரு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்துவோம் என கூறி கலங்கி அழுதார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த இடத்தில் டாட்டூ.... அசிங்கமாக காட்டி போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!