Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

AK moto Ride நிறுவனத்துக்காக பைக்குகளை வாங்கும் அஜித்.. ஒரு பைக்கின் விலை இத்தனைக் கோடியா?

Advertiesment
AK moto Ride நிறுவனத்துக்காக பைக்குகளை வாங்கும் அஜித்.. ஒரு பைக்கின் விலை இத்தனைக் கோடியா?
, செவ்வாய், 6 ஜூன் 2023 (12:48 IST)
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பைக்கில் சாகச பயணம் செல்வதில் அஜித் குமார் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். விரைவில் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பைக் பயணம் செய்ய அஜித்குமார் திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் சாகசப் பயணம் செய்பவர்களுக்கு உதவுவதற்காக AK Moto Ride என்ற புதிய நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக அந்த நிறுவனம் செயல்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்காக அஜித்குமார் இப்போது விலையுர்ந்த 10 வெளிநாட்டு இரு சக்கர வாகனங்களை வாங்குகிறாராம். இந்த பைக்குகளின் விலை 1.25 கோடி ரூபாய்(ஒரு பைக்) என சொல்லப்படுகிறது. விரைவில் அந்த பைக்குகள் இந்தியா வந்ததும் அஜித்தின் நிறுவனம் செயல்பட தொடங்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன சேலை....ஐஸ்வர்யா ராய்யின் திருமண புடவை விலை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்!