Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிமேகலையை சாணியில் முக்கி தள்ளிவிட்ட கிராம பெண் - வைரல் வீடியோ!

மணிமேகலையை சாணியில் முக்கி தள்ளிவிட்ட கிராம பெண்  - வைரல் வீடியோ!
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (12:31 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற 14ம் ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது கிராமத்தில் உள்ள சின்னபெண் ஒருவருடன் விளையாடிக்கொண்டிருக்கும் போதே தடுமாறி சாணியில் விழுந்துவிட்டார்.  இதை இன்ஸ்டாவில் பதிவிட்ட மணிமேகலை,  அடுத்த விளையாட்டில் அவளை பழிவாங்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளார். இந்த வீடியோவிற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளதோடு சகட்டு மேனிக்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Enna oru villathanam


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் பொண்ணு மாதிரி இரு... ஆசையா போட்டோ போட்டா ஆளாளுக்கு அட்வைஸ் பண்றாங்கப்பா!