Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நரம்புகள் பாயும் அருண் விஜய்யின் Transformation.... எதுக்கு இந்த மொக்க படத்துக்கா....?

Advertiesment
நரம்புகள் பாயும் அருண் விஜய்யின் Transformation.... எதுக்கு இந்த மொக்க படத்துக்கா....?
, சனி, 11 ஏப்ரல் 2020 (15:32 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் படப்பிடிப்புகள் இல்லாமல் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்க் அவுட் செய்து எப்போதும் போலவே மெயின் டெய்ன் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் நடிகர் அருண் விஜய் வீட்டில் மாடியில் உடற்பயிற்சி செய்வது , சிலம்பம் சுற்றுவது போன்ற வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருக்கும் தனது  டிரான்ஸ்ஃபர்மேசன் போட்டோவை வெளியிட்டு அனைவரையும் பிரமிப்படைய வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர் ஒருவர் மாஃபியா போன்ற ஒரு மொக்கா படத்திற்கு இவ்வளவு முயற்சியா..? என நியாயமான கேள்வி கேட்டுள்ளார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஃபியா திரைப்படம் படு தோல்வியடைந்தது. அவரது முயற்சிகள் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமாக இருந்தாலும் படத்தின் கதை அவ்வளாக பேசும்படியாக இல்லை என்பது தான் கொஞ்சம் வருத்தம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷகிலா சின்ன வயசுல இப்படி தான் இருந்தாங்க.... ஷாலு சம்முவை கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்ஸ்!