Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

VJ அர்ச்சனாவின் உடல்நிலை...

Advertiesment
VJ அர்ச்சனாவின் உடல்நிலை...
, வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (17:43 IST)
தொகுப்பாளினி அர்ச்சனா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் எனவும் செப்டம்பர் 3 ஆம்தேதி மேகும் ஒரு ஆப்பரேசன் அவருக்கு செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு அண்மையில் மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை நடந்தது. அதை தனது சமூகவலைத்தளங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்ட ஓட்டையை அடைக்க அவரது காலில் இருந்து Tissue எடுத்து மூளையில் அடைக்கப்பட்டுள்ளதாம்.

அதன் பின்னர் சில நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று நேற்று தான் வீடு திரும்பினார். அவர் உடல் மிகவும் சோர்ந்து நலிவடைந்த நிலையில் வீல் சேரில் அமர்ந்து வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.  தன் சிகிச்சைக்கு பெரும் பங்காற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  அர்ச்சனா நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், விஜே அர்ச்சனாவின் தொடையில் உள்ள தசையை வெட்டி சிஎஸ்.எஃப் கசிவைச் சரிசெய்ய அவரது மூளைப் பகுதியில் ஒட்டி உள்ளனர் மருத்துவர்கள். இதனால் அவரால் தொடர்ந்து 15- 16 மணிநேரம் செட்டில் ஷூட்டிங்கின்போது நிற்க முடியாத நிலை ஏற்படும் . அத்துடன் அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சிலமாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. மேலும்  செப்டம்பர் 3 ஆம் தேதி நடத்தப்படும் பரிசோதனைக்குப் பிறகுதான் இன்னும் சில தகவல் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவாடை தாவணி அணிந்து வெட்கத்தில் குழையும் பிரியாமணி!