Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு படத்தை வெச்சு எத்தனை வித்தை காட்றாங்க! விவேக் மீமை பார்த்து வியந்த விவேக்!

Advertiesment
ஒரு படத்தை வெச்சு எத்தனை வித்தை காட்றாங்க! விவேக் மீமை பார்த்து வியந்த விவேக்!
, வெள்ளி, 29 மே 2020 (09:10 IST)
அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மீம்களாக வெளிப்படுத்தும் நெட்டிசன்களின் ஒரு மீமை மிகவும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.

டிவிட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் விவேக் அவ்வபோது இளைஞர்கள் செய்யும் பல செயல்களை வாழ்த்தியும், சில சமயம் சில சம்பவங்களை அவருக்கே உரிய பாங்கில் கிண்டல் செய்தும் வருகிறார். தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த பதட்டம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விவேக் நடித்த “ரன்” படத்திம் சென்னைக்கு சென்று அனைத்தையும் இழந்து விடுவார். தாகத்திற்கு தண்ணீர் குடிக்க பைப்பை திறக்க அதிலிருந்து காற்றுதான் வரும். அதற்கு அவர் “இதுல ஒரு ட்யூபை மாட்டினால் சைக்கிளுக்கு காற்றடித்து பிழைக்கலாம். ஐடியா இல்லாத பசங்க” என்பார். இந்த மீம் பரவலாக வெவ்வேறு சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெட்டுக்கிளி படையெடுப்பையும், தமிழக மதுப்பிரியர்களின் மது ஆசையையும் இணைத்து கிண்டலாக ஒருவர் “ஐடியா இல்லாத பசங்க” மீமை பகிர்ந்துள்ளார்.

அதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவேக் “ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்ரீங்க!! யாரை எல்லாம் ஓட்டுரீங்க!! “Memes பசங்க ஐடியா உள்ள பசங்க!!” என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே டுவிட்டில் எத்தனை அப்டேட்டுக்கள்: ஜிவி பிரகாஷுக்கு ரசிகர்கள் நன்றி