Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வாசம் உண்மையான வசூல் எவ்வளவு ?– வாய்திறந்த தயாரிப்பாளர் !

விஸ்வாசம் உண்மையான வசூல் எவ்வளவு ?– வாய்திறந்த தயாரிப்பாளர் !
, சனி, 23 பிப்ரவரி 2019 (13:20 IST)
விஸ்வாசம் படத்தின் உன்மையான வசூல் நிலவரம் என்னவென்பது குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டுத் தொடக்கமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர்கள், விநியோக்ஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை அளிக்கும் ஆண்டாகத் தொடங்கியுள்ளது. அதற்குக் காரணம் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டுப் படங்களே. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி  பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ரிலிஸாகின. இரண்டுப் படங்களுமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களைக் கொண்டவையாக இருந்ததனால் தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர்களை கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து ரிலிஸ் ஆகின. பொங்கல் பண்டிகை விடுமுறை இதுவரை இல்லாத அளவில் இல்லாத அள்விற்கு 10 நாட்கள் கிடைத்ததால் இரண்டு படங்களும் வசூல்மழைப் பொழிந்தன.

ஆனால் சமூகவலைதளங்களில் இருக்கும் டிராக்கர்ஸ் மற்றும் ரசிகர்களின் போட்டியால் இருப்படங்களின் வசூல் விவரங்களும் மிகைப்படுத்திக் கூறப்பட்டன. பேட்ட படம் 11 நாள்களில் 100 கோடி வசூல் செய்ததாகவும் விஸ்வாசம் படம் 8 நாட்களில் 125 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இவ்வளவுப் பெரிய வசூல் சாத்தியமே இல்லை என வர்த்தக வட்டாரங்களில் உள்ளவர்கள் கருத்துக் கூறினர்.
webdunia

இதனையடுத்து விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டுப் படங்களுமே ரிலிசாகி 50 ஆவது நாளை நோக்கி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து வந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் இன்னமும் கணிசமான தியேட்டர்களில் விஸ்வாசம் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முதன்முதலாக விஸ்வாசம் படத்தின் வசூல் விவரம் குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர் ‘ விஸ்வாசம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட். நாங்கள் தயாரித்ததிலேயே அதிக வசூல் செய்தப் படம். தமிழகத்தில் தியேட்டர்கள் மூலமாக மட்டுமே ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது.விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே 70 முதல் 80 கோடி ரூபாய் வரை பங்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்ததால் இவ்வளவுப் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளது’ எனக் கூறினார்.

தயாரிப்பாளரின் இந்தத் தகவலால் தமிழகத்தில் அதிக வசூல் செய்த சாதனை செய்தப் பட்டியலில் விஸ்வாசம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90 ஆவது ஆஸ்கர் விருதுகள் – சர்ச்சைகளுக்குப் பின் நாளை அரங்கேற்றம் !