Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’அந்த ’’ தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சியில் இருக்காது - ஸ்டாலின் சவால்

’’அந்த ’’ தேர்தலுக்கு பின்  அதிமுக ஆட்சியில் இருக்காது - ஸ்டாலின் சவால்
, சனி, 23 பிப்ரவரி 2019 (12:38 IST)
அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தலைமையில்  பாஜக வுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது. தற்போது தேமுதிகவுடம் பேச்சு வார்த்தைகள்  நடத்தி வந்தலும் அது இழுபறியில் நீடிக்கிறது.
இந்நிலையில் இந்தக் கூட்டணி  குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். கடந்த வாரம் வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்  ஸ்டாலின் பேசியதாவது:
 
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில்  உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி  அமைத்துள்ளதாக  அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
 
கிராம சபா கூட்டத்திற்கு சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிற  ஸ்டாலின், இன்று புலிவலம் ஊராட்சி ஒன்றியத்தில் பேசியதாவது:
 
’’வரும் நாடாளுமன்ற  தேர்தலுக்குப் பின்னர், தமிழகத்தில்  நடக்க இருக்கிற 21 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் இருக்காது  என்று தெரிவித்தார்.’’

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை- பெங்களூரு ... பறக்க போகுது 10 நகரங்களில் புல்லட் ரயில்!