Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட குபேரா படக்குழு!

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட குபேரா படக்குழு!

vinoth

, சனி, 7 செப்டம்பர் 2024 (13:12 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பை தாராவியில் நடந்தது. மொத்த ஷூட்டிங்கும் முடிந்த நிலையில் எடிட் செய்யப்பட்ட படத்தை இயக்குனர் சேகர் சமீபத்தில் பார்த்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் வெவ்வேறு விதமான தோற்றத்தில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்டையன் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!