தெலுங்கில் எஃப் ஐ ஆர் படத்தை ரிலீஸ் செய்ய விரும்பிய விஷ்ணு விஷால்… ஆனால் நடந்தது வேறு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (09:44 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப் ஐ ஆர் திரைப்படம் தமிழில் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை தன் முதல் தயாரிப்பாக ஆரம்பித்த விஷ்ணு விஷால் படத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடித்தும் கொரோனா பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யாமல் இருந்தார். இந்நிலையில் இப்போது கேரள மற்றும் கர்நாடக உரிமை மற்றும் ஓடிடி உரிமை (அமேசான் ப்ரைம்) ஆகியவற்றை ரிலிஸூக்கு முன்பே விற்று கையில் லாபத்தோடு படத்தை ரிலீஸ் செய்கிறார். இவரின் முந்தைய படமான ராட்சசன் வெற்றியே எஃப் ஐ ஆர் விநியோகத்துக்கு பெருமளவில் உதவி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை எப்படியாவது தெலுங்கிலும் டப் செய்து வெளியிட வேண்டுமென விஷ்ணு விஷால்  விரும்பினார். ஆனால் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உரிமையை தயாரிப்பாளர் விற்று விற்றதால் அது நடக்கவில்லை. ஆனால் ஓடிடி மூலமாக படம் தெலுங்கில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதையடுத்து தெலுங்கு பதிப்பின் டிரைலரை நடிகர் நானி வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments