Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷ்ணுவிஷாலின் ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Advertiesment
விஷ்ணுவிஷாலின் ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
, புதன், 6 ஜனவரி 2021 (13:52 IST)
விஷ்ணுவிஷாலின் ‘காடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இரண்டும் நல்ல வெற்றி பெற்றது. இதன் பின்னர் 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விஷ்ணு விஷாலின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. 
 
இருப்பினும் அவர் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவை அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான காடன் திரைப்படம் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்
 
ஏற்கனவே மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இரண்டு வார இடைவெளியில் காடன் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ரிலீஸ் ஆகும் அஜித்தின் என்னை அறிந்தால் – உற்சாகமான ரசிகர்கள்!