Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரியிடம் ரூ.2.7 கோடி மோசடி செய்தது விஷ்ணு விஷால் தந்தையா? அதிர்ச்சி தகவல்

Advertiesment
சூரியிடம் ரூ.2.7 கோடி மோசடி செய்தது விஷ்ணு விஷால் தந்தையா? அதிர்ச்சி தகவல்
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (13:57 IST)
நடிகர் சூரியிடம் தயாரிப்பாளர் ஒருவர் ரூ.2.7 கோடி மோசடி செய்ததாகவும், இந்த மோசடி குறித்து தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று காலை செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என கோலிவுட்டில் ஒரு தகவல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது
 
இந்த நிலையில் இதுகுறித்து விஷ்ணுவிஷால் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை பற்றி படித்தது மிகவும் அதிர்ச்சிகரமாக வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாக தெரிகிறது. உண்மையில் சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோவுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தரவேண்டும். ’கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்கள் முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாக பேசுவது சரியாக இருக்காது 
 
நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும்வரை ரசிகர்களும் நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் உண்மையான தகவல்களுடன் இது பற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கை எடுப்பேன்
 
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதர்வா - அனுபமா நடிப்பில் "தள்ளிப் போகாதே" ட்ரைலர் ரிலீஸ்!