Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிமாறன் படத்தை தள்ளிவைத்த தனுஷ்! என்ன காரணம்?

வெற்றிமாறன் படத்தை தள்ளிவைத்த தனுஷ்! என்ன காரணம்?
, புதன், 7 அக்டோபர் 2020 (18:39 IST)
நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை கையில் வைத்துள்ள நிலையில் எந்த படத்திற்கு முதலில் கால்ஷீட் கொடுப்பார் என்பது புரியாத புதிராக உள்ளது 
 
தற்போது இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் அந்த படத்தை முடித்தவுடன் கார்த்திக் நரேன் படத்தில் நடிப்பார் என்றும் ராட்சசன் ராம்குமார் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது 
 
ஆனால் அவரது வட்டாரங்களில் இருந்து வெளி வந்த தகவலின் படி வெற்றிமாறன் படத்தில் தான் முதலில் நடிப்பார் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது சிறிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெற்றிமாறன் படத்தை சில மாதங்களுக்கு தனுஷ் தள்ளி வைத்து விட்டதாகவும் தற்போது அவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில்தான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
தனுஷ் தனது படத்தை தள்ளி வைத்ததை அடுத்து வெற்றிமாறன், சூரி படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு தனுஷ் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது குட்டி கதை அல்ல, குட்டிகளை போட்டவனோட கதை: கேவலமான காட்சிகளுடன் இரண்டாம் குத்து டீசர்