Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுவிஷாலின் அடுத்த படத்தில் செல்வராகவன்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

vishnu
, வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (18:54 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் படங்கள் இயக்குவது மட்டுமின்றி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அவர் முக்கிய வேடத்தில் நடித்த பகாசுரன் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்தநிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது., ஆர்யான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.
 
 இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரவீன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ஷராதா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார். சற்றுமுன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸின் ‘’புராஜெக்ட் கே-ல் இணையும் தென்னிந்திய ஸ்டார்கள்!