Publish Date: Sun, 28 Aug 2022 (12:28 IST)
Updated Date: Sun, 28 Aug 2022 (12:29 IST)
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் மோகன்ஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் பகாசூரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சாணிக்காகிதம் போலவே இந்த படத்திலும் செல்வராகவன் அடுத்தடுத்து கொலை செய்கிறார்
அந்த கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நட்டி நட்ராஜ் நடித்துள்ளார். இந்த இருவருக்கும் இடையிலான போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பதும் இந்த படம் நிச்சயம் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது