Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உச்சகட்டத்தை தொடும் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்… பிரகாஷ் ராஜை எச்சரித்த முன்னணி நடிகர்!

உச்சகட்டத்தை தொடும் தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்… பிரகாஷ் ராஜை எச்சரித்த முன்னணி நடிகர்!
, புதன், 6 அக்டோபர் 2021 (12:12 IST)
தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கத் தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்னதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இப்போது அவர் தெலுங்கு சினிமா நடிகர்களின் சங்கமான மா எனப்படும் மூவி ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

ஆனால் பிறப்பில் கன்னடரான பிரகாஷ் ராஜ் தெலுங்கு சினிமா நடிகர் தேர்தலில் நிற்பதற்கு அங்குள்ள நடிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதாம். ஆனால் பிரகாஷ் ராஜை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவராகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறைமுகமாக நாகார்ஜுனா உள்ளிட்ட நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜுக்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் அணியில் போட்டியிடும் நிர்வாகிகளும் வலுவானவர்களாகவே உள்ளனர். 10 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரகாஷ் ராஜை எதிர்த்துப் போட்டியிடும் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ‘பிரகாஷ் ராஜ் தேவையில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி பேசுகிறார். அதை நிறுத்த வேண்டும் என நான் உறுதியாகக் கூறுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புனேயில் பிரம்மாண்டமான அரங்கு தயார்… ஷங்கர் படத்துக்காக!