பப்ளிசிட்டி பண்ணிக்குற இடமா இது… விஜயகாந்த் நினைவஞ்சலியில் முகம் சுளிக்க வைத்த விஷாலின் பேச்சு!

vinoth
சனி, 20 ஜனவரி 2024 (09:26 IST)
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அதையடுத்து அவருக்கு பெருவாரியான ரசிகர்கள் ஒன்றாக திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரின் உடலில் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அதையடுத்து இப்போது வரை ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயகாந்துக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் அஞ்சலி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் கலந்து கொண்ட நடிகர்கள் பலர் விஜயகாந்துடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

ஆனால் இந்த நிகழ்வில் விஷாலின் பேச்சு பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதில் பேசிய அவர் “விஜயகாந்த் சார் எப்படி பலருக்கு வழிகாட்டியாக இருந்து உதவி செய்தாரோ, அதுபோல நான் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். உங்களுக்கு எப்போதாவது ஒரு படத்தில் என்னோடு இணைந்து நடிக்க வேண்டும் என்றால் நான் நடிக்க தயார்” என பேசி தன்னை ஒரு விஜயகாந்த் போல வெளிப்படுத்திக் கொண்டார்.

விஷால் நடிக்கும் சமீபகால படங்கள் (மார்க் ஆண்டனி தவிர) எதுவும் பெரிய ஹிட்டாகவில்ல.  அவருக்கே பெரிய ஹிட் படங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் இவர் சண்முகபாண்டியனுக்கு வாழ்க்கைக் கொடுக்க விருப்பம் தெரிவித்திருப்பது விஜயகாந்த் ரசிகர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஷால், தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள விஜயகாந்த் மேடையைப் பயன்படுத்துகிறார் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ லான்ச்!.. வெளியான வீடியோ!...

நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது: விக்ரமுக்கு வார்னிங் கொடுத்த பிரஜின்..!

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அடுத்த கட்டுரையில்
Show comments