Publish Date: Thu, 18 Jan 2024 (17:36 IST)
Updated Date: Thu, 18 Jan 2024 (17:39 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
உடல்நல குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் வரும் 24ம் தேதி படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என என்று தேமுதிக தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.