Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வராமல் வீட்டிலேயே அழுதிருக்கலாம்- சரத்குமார்

sarathkumar

Sinoj

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (20:18 IST)
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார்.
 

அவரது மறைவு, தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்களும், சினிமாத்துறையினரும்  இரங்கல் கூறினர்.

டிசம்பர் 29 ஆம் தேதி விஜயகாந்தின்  பூத உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்ப்பட்டது.

இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில்   பொதுமக்களும், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் இன்று மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த  நினைவேந்தல் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய  நடிகர் சரத்குமார், இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டத்தில்  நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை.

கேப்டன் விஜயகாந்த்- ன் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் இழப்பு. 1990 களில் நான் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தபோது, விஜயகாந்த்-ன் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்பதற்காக மீசை எடுத்தேன். தற்போதும் மீசை எடுத்துள்ளேன். ஆனால், இப்படி ஒரு நிகழ்வு என்று தெரிவித்தார்.

மேலும், விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வராமல் வீட்டிலேயே அழுதிருக்கலாம். யாரையும் எதிர்த்துக் குறைகூறும் நபர் இல்லை கேப்டன் விஜயகாந்த் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் திரையுலகம் சார்பில் நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம்!