விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து மீதிப் படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.
துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தைக் கடந்த ஆண்டே மே மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாக விஷால் அறிவித்திருந்தார்.
ஆனால் படத்துக்கான பைனான்ஸ் கிடைக்காதக் காரணத்தால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது விஷால் இந்த படத்தை மீண்டும் தொடங்கலாம் என்ற முடிவை எடுத்து பட்ஜெட் போட்டுப் பார்த்துள்ளாராம். பட்ஜெட்டைப் பார்த்து அவ்வளவு பெரிய தொகை தற்போது அந்த படத்துக்கு ஒதுக்க முடியாது என்பதால் அந்தப் படத்தை வேண்டாம் என்று ஓரம்கட்டி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.