சமீபத்தில் நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், இயக்குனர் கே. பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் பாக்யராஜ் நடிகர் சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி அவருக்கு விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் சங்கத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு, போட்டியிட்ட நிர்வாகிகள் பதவியேற்றுள்ள போதிலும், நடிகர் சங்க தேர்தலையும், நிர்வாகிகளையும் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்துள்ளது. எனவே சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஈடுபட்டு, நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பி வரும் தங்கள் மீதி நடடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
இன்னும் 15 நாட்களுக்குள் சங்க விரோத நடவடிக்கை ஈடுபட்டுள்ள தங்களை ஏன் நீக்கக் கூடாது என்பது பற்றிய தங்கள் பதில் அனுப்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் சங்கம் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்துள்ளது.
சமீபத்தில் கே பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென அவர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
சினிமாவிலும் அரசியல் ஆதிக்கம் உண்டோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.